தமிழ்நாடு அமைச்சர் அருண்ராஜ், எந்த அழுத்தத்திற்கும் மாநில அரசு அல்லது முதல்வர் பணிவதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பாக இருந்தாலும், எந்த வகை அழுத்தம் வந்தாலும் அதற்கு பயந்து செயல்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையில் பேசிய அவர், கொள்கை, மாநில உரிமை, சமூக நீதி குறித்து திமுக பேசினாலும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக திமுக பாஜவின் பிடியில் சிக்க வேண்டிய நிலை உருவாகிறது என்றும், அதையே தாங்கள் எதிர்க்கிறோம் என்றும் கூறினார்.
மேலும் தேர்தல் நேர கூட்டணி இல்லாமலேயே திமுக தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்து, சுயநலத்திற்காக—குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றும் நோக்கத்துடன்—இவ்வாறு செயல்படுகிறது என அவர் விமர்சித்தார். இது அரசியலில் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசியுள்ளதாக கூறிய அவர், காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவில்லை என்ற காரணத்தால் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை எப்படி புறக்கணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மறுவரையறை முக்கியமான விஷயம் என்பதால் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.





