ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது, இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை கவனித்து எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
வீரர்கள் பயன்படுத்திய ஒரு உணவகத்தில் அச்சிடப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட லவ்லினா உடனடியாக உணவக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்.
அவரது எதிர்ப்புக்குப் பிறகு, உணவக நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதுடன், வரைபடத்தை சரிசெய்வதாகவும் தெரிவித்தது.
காமன்வெல்த் பதக்கம் வென்ற வீரர்களை சந்தித்துப் பேசியபோது, லவ்லினாவின் தேசப்பற்று மற்றும் விழிப்புணர்வை மோடி குறிப்பிட்டு கவுரவித்தார். 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா, கொண்டாட்டத்தின் போது அந்த தவறான வரைபடத்தை கவனித்து கூறியதும், அவர்கள் மாற்றங்களை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
வரைபடத்தை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்ததை பாராட்டிய மோடி, அந்த சம்பவத்தின் வீடியோ சாதாரணமானதல்ல; அது நீண்ட காலம் நினைவில் நிற்கும் என்றும் கூறினார்.





