தமிழகத்தில் போதைப்பொருள் தொடர்பான செயல்களை கட்டுப்படுத்த 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்க அரசு உத்தரவிட்டு, இதற்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில், போதை ஒழிப்புக்காக தனிப்படை அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் படி, மாவட்டத்திற்கு ஒன்று என 37 அதிரடிப்படைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் 9 போலீஸ் கமிஷனரகங்களில் 28 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்படுகின்றன. இதில் சென்னைக்கு 12 படைகள்; மதுரை, ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா 2 படைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த 65 படைகளில் 65 இன்ஸ்பெக்டர்கள், 130 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 325 போலீஸ் பணியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும், படைகள் அமைத்தலும் செயல்பாடுகளும் மேற்கொள்ள ரூ.264.14 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





