சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெளியிட்ட பதிவில், தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; அது சிந்தனை, பண்பாடு, நாகரிகம் எனவும், தமிழர்களின் உயிரும் உணர்வுமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் சிறப்பை அங்கீகரித்து, தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், இது தமிழ்த்தாய்க்கு செலுத்தப்படும் உயரிய மரியாதை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்திருக்கும் என கூறிய முதல்வர், தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்த அனைத்து கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்தார். மேலும், “உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்; தமிழகத்தின் வெற்றிப் பயணம் தொடரட்டும்” என அவர் கூறினார்.