மாணவர் சேர்க்கை குறைவால் மூடப்பட்ட பள்ளிகளில் குறைந்தது 10 மாணவர்கள் சேர்ந்தால், அந்த பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் தெரிவித்தார்.
விவாதத்தின் போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன், உதகமண்டலம் தொகுதியில் மாணவர் எண்ணிக்கை போதாமையால் மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், எந்த அரசு பள்ளியும் மூடப்படவில்லை என்று கூறினார். பள்ளிகளில் இடைநிற்றலை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் பிரச்னைகளை அறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், 10 மாணவர்கள் சேர்ந்தால்கூட பள்ளி மீண்டும் செயல்படும் என்றும் அமைச்சர் கூறினார்.





