அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஈரான் தரப்பில் அச்சுறுத்தல் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் பின்னணியில், துருக்கியில் இருந்து டிரம்ப் மேற்கொண்ட பயணத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அந்த தகவலின்படி, நேட்டோ உச்சி மாநாட்டிற்காக டிரம்ப் அங்காரா சென்றிருந்தார். அவர் கத்தார் வழங்கி புதிதாகப் புனரமைக்கப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்காராவில் இருந்து புறப்படும் முன், ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறியதாகவும், ஆனால் அந்த விமானம் அங்கிருந்து புறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர் ஊடகங்கள் அங்கிருந்து சென்ற பிறகு, கேட்டரிங் வாகனம் மூலம் டிரம்பை வேறு விமானத்துக்கு ரகசியமாக அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின், அவர் சி-32ஏ (C-32A) ராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு சென்றதாகவும், அவருடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், டிரம்ப் பின்னர் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு திரும்பியதாக தகவல். இதற்கிடையே, டிரம்ப் இல்லாமல் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் கண்ணாடிகளை மூடி வைக்குமாறு கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





