சென்னை: இளைஞர்கள் சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இளைய சமுதாயத்திற்கு அவர் உளங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இளைஞர்கள் நம்பிக்கையின் வெளிச்சமாகவும் மாற்றத்தின் முகவர்களாகவும் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றல் ஆகியவற்றின் மூலம் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களிடமே இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் தமிழக இளைஞர்கள் வெற்றியடைய வாழ்த்திய முதல்வர், அவர்களின் கனவுகள் நனவாகி சாதனைகள் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.