புதுடில்லி: வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குப்படுத்தும் எப்சிஆர்ஏ (FCRA) சட்ட திருத்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு (JPC) மத்திய அரசு அனுப்பியுள்ளது.

அரசின் விளக்கப்படி, வெளிநாட்டிலிருந்து நன்கொடை வழங்குபவர் யார், அதன் நோக்கம் என்ன, அந்த நிதி இந்தியாவில் எந்த காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் தெளிவாக அறியச் செய்யும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது சிறுபான்மையினருக்கு எதிரானது எனக் கூறி, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், மசோதாவை முழுமையாக பரிசீலிக்க கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் முன்வைத்தார். அமைக்கப்பட உள்ள குழுவில் லோக்சபாவைச் சேர்ந்த 21 எம்பிக்களும், ராஜ்யசபாவைச் சேர்ந்த 10 எம்பிக்களும் இடம்பெறுவர்.