போதைப்பொருள் கடத்தல் வழக்கைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 12) தமிழகத்தில் 9 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.
இந்த விசாரணை அந்தமானில் பதிவான வழக்குடன் தொடர்புடையது. 2024ஆம் ஆண்டு விஜயபுரத்திலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் 5,500 கிலோ எடையுள்ள ‘மெத் ஆம் பெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், படகில் இருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த 7 பேருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் தமிழகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பயங்கரவாதத் தொடர்பு அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.





