தமிழக காவல் துறையின் முக்கிய பிரிவுகளில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாற்றத்தில், குற்றப்பிரிவு–குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) டிஜிபியாக பாலநாக தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சைபர் கிரைம் ஏடிஜிபியாக அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி பொறுப்பேற்கிறார்.
மற்ற மாற்றங்களில், க்யூ பிரிவு எஸ்.பி.யாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி எஸ்.பி.யாக அரவிந்த் பணியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக அர்பிதா ராஜ்புத் நியமனம் பெற்றுள்ளார்.
மேலும், கமாண்டோ படை எஸ்பியாக ஈஸ்வரன், நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக செந்தில்குமார், சென்னை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்.பி.யாக சரவணகுமார், நெல்லை தலைமையிட துணை கமிஷனராக ரமேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.





