தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முதலீட்டாளர் மாநாடு ஆகஸ்ட் 13 அன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாநாட்டை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தானது. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பதவியேற்ற 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியது. மாநாட்டில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக தமிழகம் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு நாளுக்கு ரூ.1,000 கோடி என்ற சராசரியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், நிறுவனங்கள் தொடங்க 21 நாட்களில் அனுமதி வழங்கும் நடைமுறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்ல வேண்டாம் என்பதே இலக்கு என்றும், இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதையை காட்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாடு தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பாகியது.





