தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை ஆணைகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. அதே நிகழ்வில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளும் வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தினமலர் டிவி வெளியிட்ட வீடியோவில், நீட் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் பின்னணி மற்றும் தேர்வை நோக்கி சென்ற பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.





