சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளுக்கான ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போலீசாரின் செயல்திறன், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அறிவிப்பின்படி, ஜனாதிபதியின் தகைசால் (சிறந்த) பணிக்கான பதக்கத்துக்கு 92 பேர், வீரதீர செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேர், மேலும் உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 604 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி சிறந்த சேவை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்: ஜெ. விஜய் ஆனந்த் (கூடுதல் எஸ்பி), கே. ராமச்சந்திரன் (கூடுதல் எஸ்பி) மற்றும் எஸ். குமார் (உதவி கமாண்டண்ட்).

மேலும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பட்டியலில் மாலதி (இன்ஸ்பெக்டர்), பாஸ்கர் (சப்-இன்ஸ்பெக்டர்), சிவசங்கர் (ஏஎஸ்பி), சோமசுந்தரம் (ஏஎஸ்பி), கோவிந்தராஜூ (ஏஎஸ்பி), சண்முகம் (டிஎஸ்பி), பத்தருன்னிசா பேகம் (இன்ஸ்பெக்டர்), மதிமாறன் (இன்ஸ்பெக்டர்), சரஸ்வதி (இன்ஸ்பெக்டர்), மாரியப்பன் (இன்ஸ்பெக்டர்), லெட்சுமி (இன்ஸ்பெக்டர்), ஜெயா இளவரசி (இன்ஸ்பெக்டர்), கோபால் (இன்ஸ்பெக்டர்), மணிமாறன் (உதவி கமாண்டண்ட்), லட்சுமி (இன்ஸ்பெக்டர்), செந்தில்குமார் (சப்-இன்ஸ்பெக்டர்) மற்றும் சதுரகிரி (சப்-இன்ஸ்பெக்டர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, சிபிஐயில் நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 21 அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மதுரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் ஏட்டு பால் பாண்டியன் இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.