டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பின்னர் மண் மூடியதால் தொழிலாளர்கள் சிக்கினர். இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்பல்கோட்டியில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெறும் சுரங்கப்பாதை பணியில் 18 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வேகமாக புகுந்ததால், அதன் அழுத்தத்தில் தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயில் திசைக்கு அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் உடனடியாக இடத்துக்கு விரைந்தன. கடினமான சூழ்நிலைகளில் பல மணி நேரம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.