அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சந்தேக நபர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டெட்ராய்ட் நகருக்கு வடமேற்கில் உள்ள மசவூகி எனப்படும் சிறிய கவுன்டி குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், அங்கு 3 பேர் உயிரிழந்து கிடந்ததை கண்டனர்.

விசாரணையில் 39 வயதான சாட் ஹிக்மேன் என்பவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் தப்பியோடியதாகவும் போலீசார் கூறினர். நீண்ட தேடுதலுக்குப் பின் அவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் வேறு இடங்களில் இன்னும் இருவரை சுட்டுக் கொன்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், புலனாய்வாளர்களுக்கு சவாலானதாகவும் மிச்சிகன் போலீசார் தெரிவித்தனர்.