இலங்கையில் நடைபெறும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 32 ரன்னில் இருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் ராகுல்–தேவ்தத் படிக்கல் ஜோடி இணைந்து ரன் சேர்த்தது.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 77 ரன் எடுத்திருந்த ராகுல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் கில் களமிறங்கினாலும் 16 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்திருந்த நிலையில், படிக்கல்–ரிஷப் பன்ட் ஜோடி விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது.