சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை தன்னை மற்றும் தனது குழுவை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
தனது பதிவில், சுதந்திர தின உரையில் இந்திய நிறுவனங்களும் உலகின் முன்னணி நிறுவனங்களின் வரிசையில் இணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன் பொருள், ஒவ்வொரு மட்டத்திலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வலுவான, ஆழமான அர்ப்பணிப்பு தேவைப்படுவதாகவும் கூறினார்.
அல்காரிதம்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் பாரதம் முன்னணியில் இருக்க வேண்டும் என வேம்பு தெரிவித்தார். அதைச் சாதிக்க தேவையான அறிவுத்திறன் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமரின் துணிச்சலான தொலைநோக்கு பார்வை ஸோஹோவில் எங்களை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டுகிறது என அவர் கூறி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். இறுதியில் “ஜெய் ஹிந்த்” என்றும் குறிப்பிட்டார்.





