ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த வெப்ப அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக குளிரான காலநிலைக்காக அறியப்படும் பெல்ஜியத்திலேயே, இந்த முறை அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்ட அளவை விட இறப்பு விகிதம் 77% அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. காலநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற கோடைகாலங்கள் இன்னும் தீவிரமாகலாம் என காலநிலை வல்லுநர்கள் எச்சரித்து, எதிர்கால வெப்ப அலைகளை எதிர்கொள்ள நாடுகள் முழுமையாகத் தயாராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.





