கோல்கட்டா: மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் அஷீஸ் பானர்ஜி, பீர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் (டிஎம்சி) அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக பணியாற்றிய அஷீஸ் பானர்ஜி, ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் போலீசார் கட்சி அலுவலகத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. மேலும், அஷீஸ் பானர்ஜி எழுதியதாக கூறப்படும் ஒரு பக்கக் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், எந்த வேலையிற்காகவும் பணம் பெற்றதில்லை என்றும், கட்சிக்குள் நடைபெறும் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அவற்றை எதிர்த்து போராட இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





