தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 18 அன்று செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 19 அன்று நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை தொடரக்கூடும்.

மீனவர்களுக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் 20 வரை தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆகஸ்ட் 17க்கான முன்னறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.