சர்வதேச கடல்வழி எரிபொருள் விநியோகத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் பதிலடி அளித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் மோதல் சூழலில், அந்த ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் பகுதியை விரைவில் கைப்பற்றி, அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க இருப்பதாக டிரம்ப் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி, ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கே சொந்தமானது; அது ஈரானிடமே இருக்கும் என்று கூறினார்.

மேலும், ஜலசந்தி மூடப்படுவதும் திறக்கப்படுவதும் ஈரானின் உத்தரவின்படியே நடக்கும் என்றும், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை “முடக்கம்” தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.