இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேலுடனான தனது நட்பை இந்தியா மதிக்கிறது” என குறிப்பிட்ட அவர், இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கயானா நாட்டு அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த நன்றியை அவர் சமூக வலைதள பதிவுகள் மூலம் பகிர்ந்துள்ளார்.