மாஸ்கோ: இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில், பொருளாதாரம், சமூக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு வலுவான செல்வாக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா–ரஷ்யா உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், ஐநா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ), பிரிக்ஸ் போன்ற சர்வதேச அமைப்புகளின் கட்டமைப்பில் பல துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் கூட்டாண்மை சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் டில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.