புதுடில்லியில் செங்கோட்டையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையை எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
தேசியக் கொடியேற்றிய பின்னர் மோடி பேசுகையில், ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள “மனதளவிலான நக்சல்களை” அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கருத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்து ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், மாவோயிஸ்டுகளை ஆதரித்து இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதிகளுடன் நின்று சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிப்பவர்கள், மேலும் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிக்க ‘சிக்கன் நெக்’ வழித்தடத்தை துண்டிக்க முயல்வோர் ஆகியோரையே பிரதமர் “மனதளவில் நக்சல்களைப் போன்றவர்கள்” என குறிப்பிட்டதாக ரிஜிஜூ தெரிவித்தார்.





