புதுடில்லி: ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி., வெளிநாட்டு தூதர்களை சந்தித்ததாக வெளியான தகவல் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தகவலின்படி, அந்த எம்.பி., சில காங். எம்.பி.க்களை புதுடில்லியில் உள்ள டென்மார்க் தூதரகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இந்தியாவுக்கான டென்மார்க் தூதருடன் காலை உணவு சந்திப்பு நடைபெற்றதாகவும், தமிழகத்தில் டென்மார்க் அரசு புதிய தொழில்களை தொடங்குவது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கம் காட்டுவதற்காகவா அல்லது அடுத்ததாக காங். ஆட்சி வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், வெளிநாட்டு தூதர்களை சந்திப்பதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.க்கள் பொதுவாக வெளியுறவு அமைச்சகத்தின் முன்அனுமதி பெற வேண்டும்; சந்திப்பின் நோக்கம் மற்றும் பேசவுள்ள விஷயங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு அத்தகைய அனுமதி பெறப்பட்டதா என்பது தெளிவாகவில்லை.