பீஹார் லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவான் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையையொட்டி சுவாமி தரிசனத்திற்காக பெருந்திரளான பக்தர்கள் கோவிலில் கூடியிருந்தனர்.
அப்போது கோவில் வளாகத்தில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் கூட்டநெரிசல் உருவாகி உயிரிழப்புகள் ஏற்பட்டன.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கோவில் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகள் மேற்கொண்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





