இறந்தவரின் அடையாள ஆவணங்களை என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. குறிப்பாக பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா, யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
பான் அட்டையைப் பொருத்தவரை, மரணத்துக்குப் பிறகு உடனடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லை. இருப்பினும், தவறான பயன்பாடு ஏற்படாமல் இருக்க வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பது நல்ல நடைமுறையாகக் கருதப்படுகிறது.
மேலும், இறந்தவரின் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்டுகள், சொத்துகள் போன்றவை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்றப்பட்ட பிறகும், வாரிசுகள் இறுதி வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகும் பான் அட்டையை ஒப்படைப்பது பொருத்தமானதாக கூறப்படுகிறது.
ஆதார் அட்டையைப் பற்றி பேசும்போது, இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இறந்தவரின் ஆதாரை ரத்து/நீக்கம் செய்ய அல்லது அதிகாரிகளிடம் சரண்டர் செய்ய எந்த அதிகாரப்பூர்வ வழிமுறையையும் அறிவிக்கவில்லை. எனவே ஆதார் அட்டையை சரண்டர் செய்ய தேவையில்லை.





