கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழக முதல்வர் விஜய் கடுமையாகக் கண்டித்து, இதுகுறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 15 அதிகாலையில் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத் துறை அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





