அல் அய்னில் இந்திய சமூக மையம் சார்பில் இந்தியாவின் 80வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சமூகத்தினரை ஒன்றிணைக்கும் வகையில் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
விழாவுக்கு மையத் தலைவர் மது ஓமனக்குட்டன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முபாரக் முஸ்தபா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய தூதரக அதிகாரி ரோஹித் மிஸ்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் முஸ்தபா வட்டபறம்பில் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், இந்திய பள்ளிக்கூட மாணவிகளின் கண்கவர் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை பொதுச் செயலாளர் ஹாரிஸ் நன்றியுரை கூறினார். விழாவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



