பாகூரில் உள்ள ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க (PTA) கூட்டமும், உல்லாஸ் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ரகுநாதன் தொடக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மகேஸ்வரன், முத்துலட்சுமி, நான்சி ஏஞ்சலின், ரகுநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், 2025 நவம்பரில் நடத்தப்பட்ட உல்லாஸ் கல்வித் திட்டத்தில் பங்கேற்று தேர்வை வெற்றிகரமாக முடித்த பள்ளி செல்லா மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி வளர்ச்சி, மாணவர் முன்னேற்றம், சீருடை, ஒழுக்கம், காலம் தவறாமை, மாணவர் உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வி விர்ஜினியா, யோகநாதன், தனவந்தனி, ராஜலட்சுமி, லோகேஷ்வரி, பூங்கொடி, மணி ரேவா சங்கீதா, பிரதீபா, ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.




