இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
எப்.ஓ.ஐ. ஈவென்ட்ஸ் அமைப்பு, துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையத்தில் இந்த முகாமை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமில் சுமார் 300 பேர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தவர்களுக்கு இந்திய தூதர் டாக்டர் இ. விஷ்ணு வரதன் ரெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த தகவலை வாசகர் சம்சுதீன் பகிர்ந்துள்ளார்.



