புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் சட்டப்பூர்வ அமைப்புகள், குழுக்களுக்கு ராஜ்யசபா எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல மத்திய பட்டு வாரியம், தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களாக தி.மு.க. எம்.பி. சிவா மற்றும் பா.ஜ.க. எம்.பி. சுகேந்து சேகர் ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புகளை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ளது.





