திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கணவன்-மனைவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சவுந்திரபாண்டியபுரம் மிக்கேல் தெருவைச் சேர்ந்த சிலுவைதாசன் (84) வேளாண்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் சில நாட்களுக்கு முன் மர்மநபர்கள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராதாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்: களக்காடு சுரேஷ் (35), ராதாபுரம் செட்டிகுளம் மாரிமுத்து (24), பரமேஸ்வரபுரம் பாலகிருஷ்ணன் (26), நாங்குநேரி முத்துராஜ் (21), கன்னியாகுமரி மணிகண்டன் (33), சுந்திரபாண்டியபுரம் மைக்கேல் அந்தோணி பிரகாஷ் (37).

பின்னர் நாங்குநேரி தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த மாசானம் (46) மற்றும் அவரது மனைவி முத்துமாரி (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்; மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை தொடர்கிறது.