சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது திமுக மற்றும் தவெக எம்எல்ஏக்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
அவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக எம்எல்ஏக்கள் ஒருமையில் பேசுவதுடன் “வாடா, போடா” போன்ற சொற்களை பயன்படுத்துவதாகவும், இது அவை மரபுக்கு எதிரானது என்றும் கூறினார். இத்தகைய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் கையை ஓங்கியபடி தாக்க வருவது போல முன்னே வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டினார். தவெக உறுப்பினர்களை கட்டுப்படுத்த முதல்வர் விஜயின் ஒரு பார்வை போதும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கோரினார். இதுகுறித்து அவை விதிகளுக்குட்பட்டு, சபாநாயகர் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என துணை சபாநாயகர் தெரிவித்தார்.





