சென்னை: அமைச்சர்கள் கூறும் விஷயங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து “ஆதாரம்” கேட்பது குறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது முதல்வர் விஜய் கவனம் ஈர்க்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர்கள் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பேசும்போது எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள் என்றும், முதல்வர் ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறார் என்றும் கூறினார். அவை வெளியிடப்பட்டால் எதிர்க்கட்சியின் நிலைமை குறித்து கவலைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், இதைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்ததாக கூறினார். ஒரு வாரத்திற்கு முன் நிதி அமைச்சர் மூன்று துறைகள் தொடர்பாக ஆய்வு செய்து அதன் விவரங்கள் முதல்வரின் மேசையில் இருப்பதாக கூறியதை அவர் நினைவூட்டினார்.
அந்த விவரங்கள் உண்மையிலேயே ஆதாரங்களுடன் தன் மேசையில் இருப்பதாகவும், அதை முன்கூட்டியே “ஓபன்” செய்ய வைக்க வேண்டாம் என்றும் விஜய் தெரிவித்தார். எப்போது திறக்க வேண்டுமோ அப்போது சரியாக திறக்கப்படும் என்றும், தேவையான போது பேசுவேன் என்றும் கூறிய அவர், “இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா” என்று சொன்னார்.





