சென்னை அருகே கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாடு இன்று (ஆகஸ்ட் 20) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது.

மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். தெலுங்கானா சார்பில் துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா கலந்து கொண்டார்.

மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் மற்றும் சிக்கல்களுக்கு சுமுக தீர்வு காணும் நோக்கத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர் பகிர்வு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது; உட்கட்டமைப்பு திட்டங்கள், தொழில் முதலீடுகள், சுற்றுலா வளர்ச்சி குறித்தும் விவாதம் நடைபெறலாம் என வட்டாரங்கள் தெரிவித்தன.