திருப்பூர் காணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் வடக்கு குறுமைய பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித்துறை விளையாட்டு பிரிவு சார்பில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவிகள் அணிகள் பங்கேற்று போட்டியிட்டன.

பள்ளி தாளாளர் சங்கர் மற்றும் முதல்வர் மேரி மார்கரேட் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.