திருப்பூரில் நிப்-டீ (NIFT-TEA) கல்லூரி வளாகத்தில் தெற்கு குறு மைய ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் கேஎஸ்சி அரசு பள்ளி அணியும், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கேஎஸ்சி அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.