சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அரசு எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனங்கள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்கள் அந்த கார்களை பெற மாட்டார்கள் என்று அறிவித்தார்.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய வாகனம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜயே தொடர்ந்து கூறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அரசுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உதயநிதி தெரிவித்தார்.
மேலும், உறுப்பினர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.





