தினமலர்–சத்யா இணைந்து வழங்கும் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026’ மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 21) கோலாகலமாக தொடங்கியது. கண்காட்சியை மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா திறந்து வைத்தார்.

தென் மாவட்ட மக்களை குறிவைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு ஷாப்பிங் அம்சங்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எக்ஸ்போ ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது.

ஸ்டால்களில் பெண்களுக்கான ரெடி மேட் ஆடைகள், அழகு சாதனங்கள், பேன்ஸி பேக்ஸ், டிசைனர் நகைகள், காலணிகள், பாரம்பரிய சேலை வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்களுக்கு இலவச மெகந்தி வரைந்து தரும் வசதியும் உள்ளது.

குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள் கிடைக்கும்; வண்ண வண்ண பலூன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருசக்கர/கார் பார்க்கிங், மருத்துவ உதவி, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சி நேரம் காலை 11.00 முதல் இரவு 9.00 மணி வரை. டிக்கெட் வழங்கும் நேரம் காலை 11.00 முதல் இரவு 8.30 மணி வரை. அசோசியேட் ஸ்பான்சராக ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல்; கோ-ஸ்பான்சராக பிராங்க் பேபர், கோவை லட்சுமி; எகோ-பிரண்ட்லி பார்ட்னராக நேஷனல் ஜூட் போர்டு; ஆடியோ ஸ்பான்சராக இன்போ பஸ் குறிப்பிடப்பட்டுள்ளனர்.