1984 சீக்கியர் எதிர்ப்பு கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சஜ்ஜன் குமார் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 80.
1984 அக்டோபர் 31 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்ததாக தகவல் கூறுகிறது.
அந்த கலவரங்களில் 2,700க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. டில்லி சரஸ்வதி விஹார் பகுதியில் 1984 நவம்பர் 1 அன்று ஒரு சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2018 டிசம்பரில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





