கோயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், சமூக வலைத்தள பதிவுகளுக்காகவும் செல்போன் பயன்படுத்தும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பக்தியுடன் அமைதியாக தரிசனம் செய்ய வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும், கோயிலின் புனிதத்தன்மை மற்றும் அமைதி பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் செல்போன் தடை குறித்து, அறநிலையத் துறை (HR&CE) வழிகாட்டுதல்களின் பின்னணியில் விவாதம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை எப்போது அமலுக்கு வரும், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதே தற்போது பக்தர்கள் மத்தியில் எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது.




