மேற்கு வங்கத்தின் சிலிகுரி காரிடார் ( ‘சிக்கன்ஸ் நெக்’ ) பகுதியில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோல்கத்தாவில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியாக சிலிகுரி காரிடார் உள்ளது. இந்தப் பகுதியின் எல்லை அருகே தீஸ்தா நதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வங்கதேசம் மற்றும் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது இந்திய எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

அந்த பின்னணியில், சீனா மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும் நேரடி அச்சுறுத்தலை எவ்வாறு கையாளுவது, மேலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படிப் பலப்படுத்துவது என்பதைக் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் பங்கேற்றார்.

இதற்கு முன், சிலிகுரியில் நடைபெற்ற ‘படா கானா’ நிகழ்ச்சியில் அமித் ஷா ராணுவ வீரர்களுடன் கலந்து கொண்டு, அவர்களுடன் உணவு அருந்தினார்.