லண்டனில் வெளியான தகவலின்படி, உலகிலேயே அதிக வயதுடையவரென குறிப்பிடப்படும் பிரிட்டனைச் சேர்ந்த எத்தல் கேத்தர்ஹாம் தனது 117வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் உற்சாகமாக கொண்டாடினார்.

ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் ஷிப்டன் பெல்லிங்கர் ஊரில் 1909ல் பிறந்த எத்தல், தற்போது சர்ரே பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் வசித்து வருகிறார். பேரன், பேத்தி மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிரிட்டிஷ் ராணுவ லெப்டினென்ட் கர்னலான நார்மனை திருமணம் செய்த எத்தல், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்ததாகவும், அவருக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உலகப் போர்களையும் நேரில் கண்டவர் என கூறப்படும் அவர், 2020ல் 110 வயதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார்.

மேலும், இளம் வயதில் இந்தியா வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியையும் செய்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.