ஒடிசா அருகே வங்கக் கடலில் பனாமா கொடி ஏந்திய சரக்கு கப்பல் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த கப்பல் மியான்மரிலிருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது. இரும்புத் தாதுக்கள் ஏற்றிச் சென்ற கப்பலில் மொத்தம் 24 பேர் இருந்தனர்; இதில் சீனாவைச் சேர்ந்த 20 பேரும் அடங்குவர்.
ஒடிசா கடற்கரைப் பகுதியில் சென்றபோது கப்பல் திடீரென கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூழ்கியதற்கான காரணம் குறித்து கிடைத்த தகவலில் குறிப்பிடப்படவில்லை.
சம்பவத்தையடுத்து காணாமல் போனவர்கள் இருக்கக்கூடும் என்பதால் அவர்களை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




