புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், டில்லியில் நாளை முதல் 2 நாட்கள் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 850க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உருவாகும் சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது என செய்தி கூறுகிறது.