காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரை திறக்கலாம் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (CRC), காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு (CWMA) பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை, புதுடில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற ஒழுங்காற்றுக் குழுவின் 141வது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
வரும் 15 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நீர் திறப்பு அளவாக 9,000 கன அடி என நிர்ணயித்து, அதனை ஆணையத்தின் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆய்வு செய்து, அதன்பின் உத்தரவு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு சுமார் 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.





