பிரான்சின் பாரிஸ் அருகே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஹிந்து கோவில், வரும் செப்டம்பர் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இது பிரான்சில் உருவாகும் முதல் பெரிய ஹிந்து கோவிலாக குறிப்பிடப்படுகிறது.
பாரிஸ் புறநகரான புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில் “பி.ஏ.பி.எஸ். சுவாமிநாராயண் ஹிந்து மந்திர்” என்ற பெயரில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவைத் தொடர்ந்து செப். 2 முதல் 14 வரை 13 நாட்கள் கலாசார திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஹிந்து மத பாரம்பரியம், ஆன்மிகம், கலை மற்றும் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பிரான்சில் ஹிந்து மற்றும் இந்திய கலாசார வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய இந்திய கல் வேலைப்பாடுகளுடன், இந்திய கட்டடக் கலைஞர்களின் வடிவமைப்பில் பிரான்சில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.





