டில்லியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் ஆண்டுக்கு ரூ 2.5 கோடி வருவாய் ஈட்டுகிறார் என்ற தகவலுடன், நீத்து கண்டேல்வால் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது.

அந்த பதிவின் படி, ஆண்டுக்கு மூன்று முறை ஜோதிட ஆலோசனை வழங்கும் தொகுப்புக்காக ரூ 25,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். மேலும், அந்த கட்டணத்தை செலுத்தும் சுமார் 1,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர். “அவர் நட்சத்திரங்களைப் படிக்கவில்லை; சந்தை நிலவரத்தைப் படித்திருக்கிறார்” என்று ஒருவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

“எப்போதாவது அறிவுரை சொல்ல ரூ 25,000-ஆ? என் உறவினர்கள் வாழ்நாள் முழுதும் அதையே இலவசமாக செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று இன்னொருவர் எழுதினார். மேலும் ஒருவர், “ஜோதிடம் என்பது பில்லியன் டாலர் வணிகம்; பொருளாதார மந்தநிலையையும் தாங்கும்; மந்தநிலை வந்தால் இன்னும் வளர்ச்சி பெறும்” என கருத்து தெரிவித்தார்.