கோவாவில் இருந்து டில்லி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோவாவுக்கே திரும்பி அவசரமாகத் தரையிறங்கியது.
இன்று (செப் 01) காலை 9.16 மணிக்கு 229 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் கோவாவிலிருந்து புறப்பட்டது. நடுவானில் பறந்தபோது இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானி விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக தகவல் அளித்தார்.
அதன்பின் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானத்தை மீண்டும் கோவா விமான நிலையத்தில் தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானம் காலை 9.50 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியது; பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள், விமான நிலையத்தில் தங்கும்வசதி உள்ளிட்ட உதவிகளை நிறுவனம் வழங்கியதாக இண்டிகோ தெரிவித்தது. விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் அச்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





